
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி ராதா கிருஷ்ண ராமானுஜ கூடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா 4 நாட்கள் நடந்தது.
ஆக. 26ல் திருவிளக்கு பூஜையுடன் துவங்கிய விழா, தொடர்ந்து நடன நாட்டிய நிகழ்ச்சிகள் வள்ளி திருமணம் பட்டிமன்றம், கண்ணன் பிறப்பு சாமி புஷ்ப ஊஞ்சல் அலங்காரம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன.
வானவேடிக்கை, பஜனை, கோலாட்டம், உறியடி, சிலம்பாட்டம், கொலுஉட்பட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தது. சுவாமி வீதி உலா நடந்தது. இரவு வழுக்கு மரம் ஏறும் விழா நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ண ஜெயந்தி விழா குழுவினர் செய்தனர்.