நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு ரெங்கராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா வில்வித்தை கலையில் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று 2023--24 ஆம் கல்வியாண்டில் பல பரிசுகளை பெற்றுள்ளார்.
இதற்காக சென்னையில் நடந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் இருந்து சிறப்பு சான்றிதழ்களையும், பரிசுகளையும் பெற்றார். மேலும் 10ம் வகுப்பு தேர்வில் முழு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை பள்ளி தாளாளர் விஜயகுமார் பெற்றுக்கொண்டார்.
சாதனை மாணவி கனிஷ்காவிற்கு பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.