ADDED : ஆக 25, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுரை சர்வோதயா பள்ளி குழுமம் நடத்திய எறிபந்து போட்டியில் பங்கேற்றனர்.
இதில் 12 வயதுக்குரிய மாணவர்களுக்கான போட்டியில் இப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
சாதனை மாணவர்களை தாளாளர் குருவலிங்கம், நிர்வாக அலுவலர் சித்ரா மகேஸ்வரி முதல்வர் கமலா, ஆசிரியர்கள் பாராட்டினர்.