ADDED : மே 30, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மெட்ரிக் பள்ளிகளின் சாரண இயக்கத்தை சேர்ந்த 54 மாணவர்கள் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தேசிய வனப்பயிற்சி முகாமிற்கு சென்றனர்.
அங்கு மாணவர்களுக்கு மலையேறுதல், துப்பாக்கி சுடுதல், வில் எறிதல், கயிறு ஏறுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 54 மாணவர்கள் உட்பட 6 ஆசிரியர்களை கலெக்டர் ஜெயசீலன் பாராட்டினார்.