ADDED : செப் 07, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி,: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.4 கோடியில் கருங்கல்லால் கட்டப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
திருமுறை பாராயணம், பூர்வாங்கம், கணபதி பூஜை, புண்ணியாகவா ஜனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ரக்ஷா பந்தனம், தீபாராதனை காட்டப்பட்டு மருந்து சாத்துதல் நடந்தது.
நேற்று காலை கடம் புறப்பாடு, பராசக்தி மாரியம்மன், பரிவார மூர்த்திகளான மாடசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, வராகி அம்மன், தட்சணாமூர்த்தி, ஹயக்ரீவர், வரசக்தி விநாயகர், லட்சுமிதேவி, ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், பாலமுருகன், நவக்கிரக மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.