/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வைத்தியநாதசுவாமி கோயிலில் ஜூன் 2ல் கும்பாபிஷேகம்
/
வைத்தியநாதசுவாமி கோயிலில் ஜூன் 2ல் கும்பாபிஷேகம்
ADDED : மே 05, 2024 06:10 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன். 2ல் நடப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக 2022 அக். 6ல் ராஜகோபுரத்திற்கு பாலாலயம் செய்யப்பட்டது. 2023 அக்.27ல் சிலைகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது. இதனையடுத்து ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டும், மேல் தளத்தில் தட்டோடுகள் பதிக்கப்பட்டும், கோயில் வளாகத்திற்குள் கல்தூண்கள் சுத்தம் செய்யப்பட்டும், தரையில் புதிய கற்கள் பதிக்கப்பட்டும் திருப்பணிகள் நடந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
நேற்று முன் தினம் அறநிலைத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பணிகளை நேரடி ஆய்வு செய்தார். கோயில் வளாகத்திற்குள் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், திருமலை நாயக்கர் மண்டபத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது.
ஜூன் 2 காலை 10:57 மணிக்கு மேல் 11:55 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் முத்து மணிகண்டன் தெரிவித்தார்.