/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரியில் குடிநீர் தட்டுப்பாடு
/
அரசு மருத்துவக்கல்லுாரியில் குடிநீர் தட்டுப்பாடு
ADDED : ஆக 07, 2024 07:55 AM
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தேவையான குடிநீர் விநியோகம் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் குடியிருப்புகளில் பேராசிரியர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் காலை நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படும் குடிநீர் முதலில் மருத்துவ மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு ஏற்றப்படுகிறது.
அதன் பின் கல்லுாரி முதல்வர் குடியிருப்புக்கு ஏற்றியதும் குடிநீர் விநியோகம் நின்று விடுகிறது. இதனால் பேராசிரியர்களின் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து தினமும் தேவைக்கு ஏற்ப வாகனங்களில் கொண்டு வரப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பேராசிரியர்களுக்கான குடியிருப்புகள் காலியாகும் நிலையில் உள்ளது. மேலும் நிலத்தடி நீரில் அதிக உப்புத்தன்மை இருப்பதால், அதை சுத்திகரித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.