/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவதில் மெத்தனம்
/
திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவதில் மெத்தனம்
ADDED : செப் 01, 2024 05:08 AM

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் ஊராட்சிகள் மெத்தனம் காட்டி வருகின்றன.
ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்க கூடம் அமைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 32 ஊராட்சிகளில் குப்பைகளை தரம் பிடிப்பதற்கு தலா ஒரு லட்சம் நிதியில் கூடம் அமைக்கப்பட்டது. கோபாலபுரம், பாலையம்பட்டி, பந்தல்குடி, திருவிருந்தாள்புரம், கஞ்சநாயக்கன்பட்டி உட்பட, பெரும்பாலான ஊராட்சிகளில் குப்பைகளை தரம் பிரிக்க அமைக்கப்பட்ட கூடங்கள் செயல்படாமல் உள்ளன.
குப்பைகளை முறையாக சேகரித்து அவற்றை தரம் பிரிப்பதில் ஊராட்சிகள் மெத்தனம் காட்டுகின்றன. ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க வேண்டும் என்பதற்காக கடமைக்கு தரமற்ற பணி செய்ததால் பல கூடங்கள் சேதமடைந்துள்ளன.
பாலையம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டியில் குப்பைகளை ஆங்காங்கு குவித்து எரிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டிப்பு காட்டுவது இல்லை. இதனால் ஊராட்சிகளில் இந்த திட்டம் பயனற்றதாக உள்ளது.