ADDED : மே 26, 2024 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் மற்றும் அறிவியல் துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் தலைமை திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். டீன் கணேசன் வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன் பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினார்.
பெங்களூர் அமிட்டி பல்கலைக்கழக இயக்குனர் ஜெயவேலு, தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறை கற்றல், தலைமை திறன் பயிற்சிகளை அளித்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமை ஆசிரியர்களின் ஆளுமை திறன் குறித்து பேசினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜான் பாக்கிய செல்வம், இந்திரா பங்கேற்றனர். துறை தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.