/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல்லி விழுந்த உணவு சிறுமிகள், தந்தைக்கு வாந்தி
/
பல்லி விழுந்த உணவு சிறுமிகள், தந்தைக்கு வாந்தி
ADDED : ஆக 22, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜாய் ஜெனரோன் 41. இவர் விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
இவரின் வீட்டில் நேற்று காலையில் சமைத்த உணவில் பல்லி விழுந்தது. இதை அறியாமல் அந்த உணவை மதியம் தான் படிக்கும் பள்ளியில் வைத்து சாப்பிட்ட அவரது மகள் ஜோஸ்மின் 15 , உடன் படிக்கும் ஹரிஷ்மா 15, ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டது. மேலும் அதே உணவை சாப்பிட்ட ஜாய் ஜெனரோனுக்கும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.