/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 87.37 கோடி கடன் வழங்கல்
/
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 87.37 கோடி கடன் வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 87.37 கோடி கடன் வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 87.37 கோடி கடன் வழங்கல்
ADDED : மார் 09, 2025 05:35 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 10,569 பேருக்கு ரூ. 87.37 கோடி கடனுதவி, இணை மானியத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
மாவட்டத்தில் ஊரக பகுதியைச் சேர்ந்த 703 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 62.41 கோடி வங்கி கடன், நகர்புற பகுதியைச் சேர்ந்த 128 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.50 கோடி கடன், இதர மகளிர் நலத்திட்டங்களில் 410 பேருக்கு ரூ. 2.30 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 186 பேருக்கு ரூ. 2.16 கோடி என மொத்தம் 10, 569 பேருக்கு ரூ. 87.37 கோடி கடனுதவி, இணை மானியத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இதில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சி தலைவர் மாதவன், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் வசுமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.