/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.1.08 கோடிக்கு கடனுதவிகள்: மு.ரஞ்சித், மாவட்ட மேலாளர், தாட்கோ.
/
தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.1.08 கோடிக்கு கடனுதவிகள்: மு.ரஞ்சித், மாவட்ட மேலாளர், தாட்கோ.
தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.1.08 கோடிக்கு கடனுதவிகள்: மு.ரஞ்சித், மாவட்ட மேலாளர், தாட்கோ.
தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.1.08 கோடிக்கு கடனுதவிகள்: மு.ரஞ்சித், மாவட்ட மேலாளர், தாட்கோ.
ADDED : ஆக 09, 2024 12:22 AM

தாட்கோவின் நோக்கம்
தாட்கோ என்பதன் விரிவாக்கம் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் . இத்துறை எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பொருளாதார ரீதியாகவும், சமுக முன்னேற்றத்திற்கும் கடன் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
தாட்கோவின் திட்டங்கள்
தொழில் முனைவோர் திட்டம் பாரத் பிரதம மந்திரி ஜன் அரோக்யத் திட்டம், முதல்வர் ஆதி திராவிடர், பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
புகைப்படம், பிறப்பு, ஜாதி சான்று, திட்ட அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, வருமான சான்று ரூ. லட்சத்திற்கு மிகாமல், ரேஷன் கார்டு, ஜி.எஸ்.டி., எண்ணுடன் விலைப்புள்ளி ஆகியவை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
தொழில் முனைவோர் திட்டத்திற்கு உள்ள வரைமுறைகள்
முதல்வர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. கடன் கோரும் தொழிலில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. திருமணமாகாத விண்ணப்பதாரராக இருப்பின் குடும்பத்தில் யாரும் பெற்றிருக்க கூடாது.
மாவட்டத்தில் அதிகளவில் கால்நடை வளர்க்க, மேய்ச்சல் நிலங்கள் உள்ளதால் பாரத் பிரதம மந்திரி ஜன் அரோக்யத் திட்டம் எனும் புதிய திட்டத்தில் ஆடு, மாடு வளர்க்க ஒரு நபருக்கு அதிகப்பட்சமாக ரூ.1.50 லட்சத்தில் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு மின்மோட்டார் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. பி.வி.சி., பைப்லைன் இணைப்புக்கு 50 சதவீதம் அல்லது ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. துரித மின் இணைப்பு திட்டத்தில் இருந்து பயன்பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேளாண்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்தே மோட்டார், பைப்லைன்கள் வாங்க வேண்டும்.
மாவட்டத்தில் 2023ல் திட்டங்களில் செய்த சாதனை
நில மேம்பாட்டு திட்டத்தில் ரூ.93 ஆயிரத்து 600, தொழில் முனைவோர் திட்டத்தில் ரூ.1 .8கோடி, சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.32.19 லட்சம் என பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் விதம்
இணையத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மொத்தமாக சேகரிக்கப்பட்டு தாட்கோ மேலாளர் முன்னிலையில் நேர்காணல் நடக்கும். தகுதியுடைவர்களுக்கு கடனளிக்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.