/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரி முனையம் வர்த்தகர்கள் கோரிக்கை
/
லாரி முனையம் வர்த்தகர்கள் கோரிக்கை
ADDED : மார் 28, 2024 05:23 AM
சிவகாசி: சிவகாசியில் பார்க்கிங் வசதி, லாரி முனையம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வர்த்தக சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
சிவகாசி வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ரவி அருணாச்சலம், செயலாளர் தனசேகர், பொருளாளர் பாஸ்கரன், உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்து தர வேண்டும். சிவகாசி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய மாநகராட்சி கட்டடம் அருகே உள்ள சாத்துார் ரோடு காந்தி ரோடு இணைப்புச்சாலை வேலையை துரிதபடுத்த வேண்டும்.
பெருகி வரும் கனரக வாகனங்களில் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கனரக வாகன முனையம் அமைக்க வேண்டும். மாவட்ட அளவில் தொழில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்சார்பு கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.