/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் தாழ்வாக தொங்கும் மின் வயர் விபத்து ஏற்படும் அபாயம்

ADDED : பிப் 23, 2025 04:31 AM

விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டில் தாழ்வாக செல்லும் மின் வயர், பஸ்கள் மீது உரசும் அபாயம் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் ஆக. 21 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. படிப்படியாக ஒவ்வொரு வசதியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருக்கை வசதிகள், போலீசாரின் இரவு ரோந்து போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே உள்ள மின் வயர் தாழ்வாக செல்கிறது. சில பஸ்களை உரசும் வகையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம்ஏற்பட்டுள்ளது. இந்த வயர்களை தாங்கும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது.
ராஜபாளையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேரில் மின் வயர் சிக்கி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர். இதையடுத்து அனைத்து தேர்வழித்தடங்களிலும் மின்வாரியம் தரைவழித்தட பணிகளை செய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பஸ் மீது மின் வயர் உரசியதில் ஒருவர் இறந்துள்ளார். மின்வாரியம் மக்கள் பயன்பாட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் இது போன்று இருப்பதை சரி செய்து விபத்து அபாயத்தை முன்பே தடுக்க வேண்டும்.