/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமப்புறங்களில் பாலம் போடும் பகுதிகளில் தாழ்வான மின் ஒயர்கள்
/
கிராமப்புறங்களில் பாலம் போடும் பகுதிகளில் தாழ்வான மின் ஒயர்கள்
கிராமப்புறங்களில் பாலம் போடும் பகுதிகளில் தாழ்வான மின் ஒயர்கள்
கிராமப்புறங்களில் பாலம் போடும் பகுதிகளில் தாழ்வான மின் ஒயர்கள்
ADDED : ஆக 07, 2024 06:35 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதிகளில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.
மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் நீர்வரத்து ஓடையை கடக்கும் இடங்களில் பால பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் நடந்து முடிந்து திறக்க தயார்நிலையில் உள்ளன.
இந்நிலையில் பாலம் போடும் பகுதிகளில் ஏற்கனவே இருந்த உயரத்தை காட்டிலும் சற்று அதிக உயரத்தில் பால பணிகள் நடப்பதால் மின் ஒயர்கள் தாழ்வாகி விட்டன. இதனால் இந்த வழியை பயன்படுத்தும் போது விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பல பகுதிகளில் இந்த சிக்கல் உள்ளது.
விருதுநகர் அருகே மன்னார்க்கோட்டை ஊராட்சியில் பல பகுதிகளில் மின்ஒயர் தாழ்வாக செல்கிறது. இதே போன்ற சூழல் பல்வேறு ஊராட்சிகளில் நீடிப்பதால் புதிதாக பாலப்பணிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மின் ஒயர் செல்லும் உயரத்தை சரிபாரத்து தேவைப்பட்டால் அவற்றை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.