ADDED : மார் 09, 2025 03:32 AM
அருப்புக்கோட்டை, : மல்லிகைப் பூ விலை குறைவாக உள்ள நிலையில் முகூர்த்த நாட்களாக இருப்பதால் மற்ற பூக்களின் விலை உயர்ந்து உள்ளது.
அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், ரோஜா, செண்டு பூ சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் விளைவிக்கப்படுகிறது.
மல்லிகை பூ 3 மாதங்களாக சரியான விளைச்சல் இல்லை. பனி மூட்டத்தால் மல்லிகை பூ வரத்து குறைந்து போனது. காலம் தவறி மழை பொய்ததாலும் மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டது.
தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில், மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளது. அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில், 1 கிலோ மல்லிகை பூ 550 ரூபாயாக உள்ளது. முகூர்த்த நாட்கள் என்பதால் மற்ற பூக்களான முல்லை 800, பிச்சி 700, கனகாம்பரம் 400, ரோஜா 250, சம்பங்கி 200 என விலையாக உள்ளது. அடுத்தடுத்து மல்லிகை பூ வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.