/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கமல நாச்சியார்புரத்தில் வெறி நாய்கள் தொல்லை
/
செங்கமல நாச்சியார்புரத்தில் வெறி நாய்கள் தொல்லை
ADDED : ஜூலை 25, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி என்.ஜி.ஓ.,  காலனி 15 வது தெருவில் 50க்கும் மேற்பட்ட நாய்கள்  வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகிறது. சமீபத்தில் பள்ளி சென்ற மாணவனை நாய்கள் விரட்டியதால் கீழே விழுந்து காயமடைந்தார்.  இதனால் தெருவில் யாருமே நடமாட முடியவில்லை. மேலும் டூவீலரில் செல்பவர்களை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
ரோட்டில் நாய்கள் கூட்டமாக திரிவதால் விலகிச் செல்லவும் வழி இல்லை.  நாய்களை அகற்றுவதற்கு ஊராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

