/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் செயல்படும்: விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகா உறுதி

ADDED : ஏப் 13, 2024 02:50 AM

சிவகாசி : '33 மாதங்களில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என விருதுநகர் பா.ஜ.,வேட்பாளர் ராதிகா தெரிவித்தார்.
சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஒரு எம்.பி., கூட இல்லாத போதிலும், தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் மோடி. தமிழக பா.ஜ.,வை அண்ணாமலை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார்.
விருதுநகரில் மருத்துவக் கல்லுாரி, அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா, சீன பட்டாசு தடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் பிரதமர் மோடி. பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்களுக்கு இதுதான் பதில்.
பட்டாசு தொழிலுக்கு பிரச்னை வந்த போது அண்ணாமலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடும் முயற்சி செய்து பட்டாசு தொழிலை காப்பாற்றினர். பட்டாசு தொழிலுக்கு உறுதுணையாக பா.ஜ., இருக்கும். யார் என்ன சொன்னாலும் 33 மாதங்களில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
சிவகாசி அருகே நடுவப்பட்டியில் பிரசாரத்திற்கு சென்ற போது பிரசார வாகனம் தெருவிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் சரத்குமார், ராதிகா டூவீலரில் சென்று ஓட்டு சேகரித்தனர்.