/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுநீரில் மிதக்கும் மதுரை ரோடு
/
கழிவுநீரில் மிதக்கும் மதுரை ரோடு
ADDED : ஜூலை 05, 2024 11:03 PM

அருப்புக்கோட்டை- அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் வழியாக செல்லும் மதுரை ரோட்டில் வாறுகால் பணி நடைபெறுவதால் வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் விடப்படுவதால் மக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வேலாயுதபுரம்பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு வாறுகால் கட்டுவதற்காக தோண்டப்பட்டது. தோண்டிய பிறகு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல தெருக்களை சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜூன் 18ல் இப்பகுதி மக்கள் ரோடு மறியல் செய்தனர். உடனடியாக வாறுகால் பணி செய்து முடிக்கப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாக வாறுகால் பணி துவங்கியது.
வாறுகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மின் மோட்டார் வைத்து ரோட்டிலேயே விடுவதால் மதுரை ரோடு கழிவு நீரால் மிதக்கிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கழிவு நீரை முறையாக வெளியேற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாறுகால் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.