ADDED : ஆக 23, 2024 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியில் சக்தி விநாயகர் கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா, 10 நாள் நடந்தது. விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இரவில் சுவாமி வீதி உலா நடந்தது.
தினமும் சிறப்பு அபிஷேகங்கள் , உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. விநாயகருக்கு 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

