/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி ரூ.67 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
/
அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி ரூ.67 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி ரூ.67 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி ரூ.67 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
ADDED : பிப் 28, 2025 07:16 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை கிடைத்துள்ளதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.67 ஆயிரம் மோசடி செய்த இடைப்பாடியை சேர்ந்த கவின் 34, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் தன்னை வருவாய் உதவி அலுவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, செல்வராஜ் மனைவிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையில் சேர்வதற்கு அவர் அனுப்பிய ஜி-பே எண்ணிற்கு பல்வேறு தவணைகளில் ரூ. 67 ஆயிரம் ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். அதன் பின் தொடர்பு கொண்ட போது அந்த நபர் அழைப்பை ஏற்காததால் செல்வராஜ் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஏ.டி.எஸ்.பி., அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கனாபுரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் கவின் 34,இதில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்து ரூ. 17 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.