ADDED : செப் 14, 2024 01:52 AM

விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி ரோடு பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு மிக மோசமான நிலையில் மண்தரையாக உள்ளதால் வாகன ஓட்டிகள்கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் ராமமூர்த்தி ரோடு 2022ல் தான் போடப்பட்டது. இந்த ரோடு மல்லாங்கிணர் செல்வதற்கும், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் கடந்த ஆண்டு பாதாளசாக்கடை குழாய் லீக்கால் பள்ளம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து குழாயை மாற்றியமைத்து சரிசெய்து விட்டனர்.
அதன் பிறகு சேதமடைந்த பகுதியில் பேட்ஜ் பணிகள் செய்தனர். தற்போது கல்லுாரி ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள பகுதியில் பாதாளசாக்கடை லீக்கேஜ் சரி செய்ய ரோடு தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த ரோடு மண்தரை போல் காட்சி அளிக்கிறது. மக்கள்விபத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்காலிகமாக இதை சரி செய்ய ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ரோட்டில் ஆம்புலன்ஸ்சும் செல்ல வேண்டி உள்ளது. சறுக்கல் தரும் மண்ணை அப்புறப்படுத்தி பேட்ஜ் பணிகள் விரைந்து செய்தால் தீர்வு கிடைக்கும்.