/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மறு ஓட்டு எண்ணிக்கைகேட்பது சிறு பிள்ளைத்தனம் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி

ADDED : ஜூன் 14, 2024 04:15 AM
விருதுநகர்: மறு ஓட்டு எண்ணிக்கை கேட்பது சிறு பிள்ளைத்தனம் என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பா.ஜ., அரசு நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு நம்பி ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, டில்லி, பீகார் ஆகிய மாநில தேர்தல்களில் பா.ஜ., தோல்வி அடையும். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியும் பா.ஜ., வெற்றி பெற முடியவில்லை. தென் மாநிலங்களில் இருந்து தான் அதிக வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு தென் மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டை குறைத்து வழங்குகிறது.
பா.ஜ., வின் மைனாரிட்டி ஆட்சி நீடிக்காது. இண்டியா கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும். மறு ஓட்டு எண்ணிக்கை கேட்பது சிறு பிள்ளைத்தனம். மக்கள் தீர்ப்பளித்து இண்டியா கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது போன்ற பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். தேர்தலில் ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் வெற்றியாகவே கருதப்படும், என்றார்.