/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
/
மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 25, 2024 06:49 AM
சாத்துார், : சாத்துார் மாரியம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சாத்துார் முக்குராந்தல் மாரியம்மன் காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8:45 மணிக்கு கோயில் முன்பு நாட்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் பூஜை நடந்தது. திருவிழா கொடி ஏற்றத்தை தொடர்ந்து மாரியம்மன் தினமும் சப்பரம் காமதேனு பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். மார்ச் 31 பொங்கல் விழாவும் பூக்குழி திருவிழா நடக்கிறது. அன்று பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடனை செலுத்துவர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.