ADDED : ஜூலை 01, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்கத்தின் முதல் மாநில பேரவை கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கபழம் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் நிர்ணயிக்கும் ஊதியத்தை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்குதல், அரசியல் தலையீடு இல்லாமல் பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம், மாதந்தோறும் 5 தேதி ஊதியம் உள்பட 8 கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் வேல்முருகன், நிதி காப்பாளர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் பிரகாஷ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பங்கேற்றனர்.