/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலரில் பஸ் மோதி மெக்கானிக் பலி
/
டூவீலரில் பஸ் மோதி மெக்கானிக் பலி
ADDED : பிப் 26, 2025 07:24 AM

காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணி மகன் அருண்பாண்டியன் 27.  டூ வீலர் மெக்கானிக். நேற்று காலை  மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் எஸ். கல்லுப்பட்டி பிரிவு ரோட்டில்  டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை)  ரோட்டை கடக்க  முயன்ற போது, அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ்,  டூவீலர் மீது மோதியதில்  இறந்தார்.
வாலிபர் மாயம்
சாத்துார்: சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மகன் பாலமுருகன், 21. பிப்.23ல் இருசக்கர வாகனத்தில் மாலை 6:30 மணிக்கு வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி பதுக்கிய 5 பேர் கைது
விருதுநகர்: ஆமத்துாரைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் 40, மதன்குமார் 22, கணேஷ் குமார் 28, கணேஷ்குமார் 24, மகாதேவன் சேர்வர்சாமி 40, ஆகியோர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மிஷின் திரி 12 இன்ச் குழாய் 120 எண்ணம், மிஷின் திரி 2 கட்டு பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

