ADDED : ஜூலை 21, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் மாணவிகளுக்கு சமூக ஊடகங்கள் வழி ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். துறை தலைவர்கள் நாகராஜன், கோபால் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி வரவேற்றார். திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள நம்பிக்கை மையத்தின் ஆற்றுநர் விஜயலட்சுமி, சமூக ஊடகங்கள் வழியாக மன அழுத்தம் குறித்தும், உடல் ரீதியான பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வினையும் கூறினார்.
ஏற்பாடுகளை பாவை மன்றம், கேலி வதை தடுப்புக் குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.
இணை பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.