நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் துணை கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து நிலை போலீசாருக்கான மருத்துவ முகாம் போலீஸ் குடியிருப்பில் நடந்தது.
டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் வரவேற்றார். மதுரை சரக டி.ஐ.ஜி., துரை மருத்துவ முகாமை துவக்கி வைத்தும், டிராபிக் போலீசாருக்கான ஒளிரும் ஜாக்கெட், பேட்டல் விளக்கு, கூலிங் கிளாஸ் வழங்கி பேசினார். சங்கரா கண் மருத்துவமனை, போத்தீஸ் குழும குருமா டிரஸ்ட் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகளை செய்தனர். ஏராளமான போலீசார், அவர்கள் குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் நன்றி கூறினார்.