ADDED : ஆக 22, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி தோணுகாலில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, எஸ்.பி.எம்., டிரஸ்ட், லயன்ஸ் கிளப், தோணுகால் ஊராட்சி இணைந்து இலவச பொது மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடத்தினர். ஊராட்சித் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் துவக்கி வைத்தார். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி வரவேற்றார். 150க்கு மேற்பட்ட நோயாளிகள் பரிசோதனை செய்தனர். இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக இயங்கிய மீனாட்சி டெலி மெடிசன் சென்டரை எஸ்.பி.எம்., மருத்துவமனை மூலம் வரும் ஆக. 28 முதல் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படுத்துக் கூடிய ஆயத்த பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.