/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் விபத்துக்கள் அதிகரிப்பு
/
மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் விபத்துக்கள் அதிகரிப்பு
மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் விபத்துக்கள் அதிகரிப்பு
மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் விபத்துக்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 07, 2024 06:47 AM
காரியாபட்டி : காரியாபட்டி மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் ரோட்டை விரிவுபடுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் காரியாபட்டி மீனாட்சிபுரம் அ. முக்குளம் ரோட்டில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த வழித்தடத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. அதே போல் முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம் உள்ளிட்ட பெரிய ஊர்களில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தானியங்களை ஏற்றி செல்ல வாகனங்கள் வந்து செல்லும். ரோடு ஒரு வழிப் பாதையாக உள்ளது. பாரம் தாங்காமல் கவிழ்ந்து விடும் என்கிற அச்சத்தில் பெரும்பாலான கனரக வாகன ஓட்டுனர்கள் ரோட்டை விட்டு கீழே இறக்குவது கிடையாது. ரோட்டிலே நிறுத்தி விடுவர்.
மற்ற வாகனங்கள் விலகிச் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்களை விலகிச் செல்ல நீண்ட போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. இதில் பெரும்பாலான நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் லாரியை முந்தி செல்ல முயன்ற இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மூவர் படுகாயம் அடைந்தனர். இதுபோன்று ஏராளமான உயிர்பலிகள் நடந்துள்ளன. பலத்த காயம் அடைந்து பலர் தவித்து வருகின்றனர்.
பொதுவாக வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப ரோடுகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் அதிக போக்குவரத்து உள்ள ரோடுகளை கண்டறிந்து விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் வந்து செல்லும் மீனாட்சிபுரம் அ.முக்குளம் ரோட்டை இருவழிப்பாதையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.