ADDED : மே 14, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி, கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வித தனித்திறமை உண்டு. நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் பெரிதாகவும், தேர்ச்சி பெற முடியாதவர்கள் சிறியதாகவும் எண்ண வேண்டாம். தற்போது பெற்றுள்ள மதிப்பெண் பட்டியலை மாற்ற முடியாது.
ஆனால் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த கல்வியாண்டிலேயே மேல்நிலைக் கல்வியை தொடர முடியும். எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

