நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 26, இவரது கணவர் முத்துராஜ் 32, அருப்புக்கோட்டை தனியார் நுாற்பு மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இவர் மார்ச் 29 இரவு ஷிப்ட் சென்றவர் மறுநாள் வரை வரவில்லை. தமிழ் செல்வி அவரை தேடியதில் அவரது அக்கா கணவர் கண்ணன், உன் கணவர் வேலைக்கு போகாமல், 4 பேர்களுடன் இரவு 9:30 மணிக்கு நூற்பாலைக்கு பின்புறம் சென்றதைப் பார்த்ததாக கூறியுள்ளார்.
மறுநாள் மாலை 3:30 மணிக்கு மில் குடியிருப்பிற்கு பின்புறம் அடிபட்ட காயங்களுடன் முத்துராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.- -

