/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் ரூ.6.44 கோடியில் புதிய அரசு மருத்துவ கட்டடங்கள் அமைச்சர்கள் திறப்பு
/
மாவட்டத்தில் ரூ.6.44 கோடியில் புதிய அரசு மருத்துவ கட்டடங்கள் அமைச்சர்கள் திறப்பு
மாவட்டத்தில் ரூ.6.44 கோடியில் புதிய அரசு மருத்துவ கட்டடங்கள் அமைச்சர்கள் திறப்பு
மாவட்டத்தில் ரூ.6.44 கோடியில் புதிய அரசு மருத்துவ கட்டடங்கள் அமைச்சர்கள் திறப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:29 AM

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 6.44 கோடியிலான புதிய அரசு மருத்துவக் கட்டடங்களை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு, விருதுநகரில் நகர்புற சுகாதார நிலையத்திற்கு ரூ. 45 லட்சத்தில் புதிய கட்டடம், அல்லம்பட்டியில் ரூ.35 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், வச்சக்காரப்பட்டியில் ரூ.35 லட்சத்தில் துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் தலைமை வகித்து திறந்து வைத்தனர்.
மேலும் காணொலி மூலம் ஆரம்ப, துணை ஆரம்ப சுகதாரநிலைய கட்டடங்களை திறந்து வைத்தார்.
இதில் பொது சுகாதாரம், நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன், மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வர் சீதாலட்சுமி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பாபுஜி, மாவட்ட சுகாதார அலுவலர் யசோதா மணி, விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று காலையில் அமைச்சர் சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்து சிவகாசி அரசு மருத்துவமனை, நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் நலன் விசாரித்து, மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
*விருதுநகர் கன்னிச்சேரி புதுார் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சிவகங்கை செல்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் சூலக்கரை நான்கு வழிச்சாலை அருகே வந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்திருந்த முனியப்பன் 34, மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.