ADDED : ஜூலை 08, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 9-
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் நான்கு வழிச்சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஜூலை1 மாலை குப்பையில் வைக்கப்பட்ட தீயினால் புகைமூட்டம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். டூவீலரில் செல்பவர்கள் விபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை எம்.எல்.ஏ. கார்த்திக், நகராட்சி அதிகாரிகளுடன் குப்பை கிடங்கை பார்வையிட்டு, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
