நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:' தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அனுப்பிய மனு:
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மதுரைக்கு அடுத்து கோவில்பட்டி சந்திப்பில் நின்று செல்கிறது.
இதனால் விருதுநகர் மாவட்ட பயணிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும் பயணச் செலவும், நேரமும் அதிகமாகிறது. எனவே விருதுநகர் சந்திப்பில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

