/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நடமாடும் மாதிரி ஓட்டுப்பதிவு மையம்
/
நடமாடும் மாதிரி ஓட்டுப்பதிவு மையம்
ADDED : ஏப் 17, 2024 06:48 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.. கல்லூரியில் 100 சதவிகித ஓட்டுபதிவை வலியுறுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசு பஸ்சில் நடமாடும் மாதிரி ஓட்டு பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் பூத் செயல்படும் விதம், எவ்வாறு ஓட்டளிப்பது , விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இயந்திரம் மூலம் ஓட்டு போடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், சிவன் கோவில், திருச்சுழி பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நடமாடும் மாதிரி ஓட்டு பதிவு மையம் சென்றது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை போக்குவரத்து அலுவலர் கண்ணன், கல்லூரி முதல்வர் செல்லத்தாய், அரசு போக்குவரத்து கிளை அலுவலர்கள் செய்தனர்.

