/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் கேமரா பொருத்தி கண்காணிப்பு
/
நரிக்குடியில் கேமரா பொருத்தி கண்காணிப்பு
ADDED : செப் 05, 2024 04:21 AM
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை போலீசார் துவக்கியுள்ளனர்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிய முடியாமல் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்களின் பங்களிப்போடு சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
நரிக்குடியில் முக்குரோடு, திருப்புவனம் ரோடு, போலீஸ் ஸ்டேஷன் முகப்பு, பஸ் ஸ்டாண்ட், மறையூர், சாலை இலுப்பகுளம், பனைக்குடி ஆகிய இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜோதி பாசு, எஸ்.ஐ., முகைதீன் அப்துல் காதர், எஸ்.எஸ்.ஐ.,கள் ராஜேஷ்கண்ணன், உமாசங்கர், பிரபாகரன், திருநாவுக்கரசு ஆகியோர் முயற்சி எடுத்து ரூ.3 லட்சம் செலவில் 45 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.