ADDED : ஜூலை 17, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : ஆலங்குளம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோதை ஆண்டாள், 40. சத்துணவு பணியாளர் . இவர் மகள் பவித்ரா, 17. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று காலை 7:30 மணிக்கு புளியடிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர்.
எதிரில் ராஜபாளையம் சென்ற அரசு டவுன் பஸ் டூ வீலர் மீது மோதியது. சம்பவ இடத்தில் கோதை ஆண்டாள் பலியானார். பவித்ரா காயமடைந்தார்.சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.