/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகள் அல்லல்
/
காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகள் அல்லல்
ADDED : ஆக 07, 2024 07:47 AM

விருதுநகர் : விருதுநகரில் ரோட்டோரங்களில் காற்றில் பறக்கும் குப்பையால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சியின் ரோட்டோரங்களில் ஆங்காங்கே குப்பை பாயின்டுகள் முளைத்து வருகின்றன. இதில் சில நாள்பட்டவையாக உள்ளன. அதாவது நீண்ட காலமாக குப்பை பாயின்டாக இருந்தாலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அவை அகற்றப்பட்டு 'குப்பை கொட்டாதீர்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டாலும், மக்கள் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் கொட்டப்பட்ட குப்பை தற்போது அடிக்கும் ஆடி காற்றில் பறந்து எதிர்திசைக்கு செல்வதால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகின்றனர். காற்றில் குப்பை, மண் அடித்து வாகன ஓட்டிகள் மீது படுகிறது.
விருதுநகர் கணேஷ் நகர் அருகே உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதியில் இந்த பிரச்னை உள்ளது. முன்பு குப்பை, பாயின்டாக இருந்தாலும், அவை அகற்றப்பட்ட நிலையில், பராமரிப்பற்ற காலிநிலங்களில் ஆங்காங்கே தேங்கிய பிளாஸ்டிக் குப்பை இவ்வாறு காற்றில் அடித்து வரப்படுகின்றன. தற்போது சர்வீஸ் ரோட்டின் நடைபாதையில் குப்பை குவிந்து கிடக்கின்றன.
நகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அள்ள வேண்டும். இன்னொரு முறை குப்பை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.