/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத ‛' சிக்னல்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
செயல்படாத ‛' சிக்னல்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 27, 2024 05:43 AM

விருதுநகர் : விருதுநகர் மீனாம்பிகை பங்களாவில் டிராபிக் சிக்னல் பல மாதங்களாக செயல்படாமல் கம்பிகள் சேதமாகி விழும் நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருமங்கலம், கள்ளிக்குடி செல்லும் பஸ்கள் மீனாம்பிகை பங்களா வழியாக செல்கின்றன. மீனாம்பிகை பங்களா பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு முன்னேறி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
ஆனால் சிக்னலை தொடர்ந்து பராமரிக்காததால் தற்போது செயல்படாமல் உள்ளது. மேலும் கம்பிகள் சேதமாகி இருப்பதால் எப்போது யார் மீது விழும் என்ற அச்சம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை ரோட்டில் முதியவர் சைக்கிள் மீது செயல்படாத சிக்னல் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக முதியவர் உயிர் தப்பினார்.
இதே போல மீனாம்பிகை பங்களா சிக்னல் விழுந்தால், அதில் உள்ள விளம்பர பலகையும் சேர்த்து விழும் என்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இதை சரிசெய்து செயல்படுத்த தவறியவர்கள், அகற்றி வாகன ஓட்டிகளின் உயிரை காக்க வேண்டும். எனவே மீனாம்பிகை பங்களாவில் செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.