/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
/
ரோடு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 01, 2024 11:52 PM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி லட்சுமி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு போடப்படாததால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி லட்சுமி நகரில் 4 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இதுவரையிலும் இப்பகுதியில் ரோடு போடப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெரு முழுவதுமே சேறும் சகதியும் ஆக மாறி விடுகின்றது.
இதனால் மழை பெய்தால் வாகனங்களை மெயின் ரோட்டிலேயே நிறுத்தி நடந்து செல்ல நேரிடுகின்றது.
குழந்தைகள், பெரியவர்கள் தடுமாறி விழ நேரிடுகின்றது. எனவே இப்பகுதியில் உடனடியாக ரோடு போட வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.