/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அல்லம்பட்டி ரோட்டில் மேன்ஹோல் 'லீக்' வாகன ஓட்டிகள் அவதி
/
அல்லம்பட்டி ரோட்டில் மேன்ஹோல் 'லீக்' வாகன ஓட்டிகள் அவதி
அல்லம்பட்டி ரோட்டில் மேன்ஹோல் 'லீக்' வாகன ஓட்டிகள் அவதி
அல்லம்பட்டி ரோட்டில் மேன்ஹோல் 'லீக்' வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 17, 2024 12:48 AM

விருதுநகர் : விருதுநகர் - அல்லம்பட்டி சுரங்கப்பாதை ரோட்டில் கடந்த ஒரு வாரமாக பாதாளச்சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது. இந்த துார்நாற்றம் தாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகரில் இருந்து அல்லம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பாதாளச்சாக்கடையில் கடந்த ஒரு வாரமாக மாலையில் பெய்த மழையால் மண் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
இவ்வழியாக தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் கழிவு நீர் துார்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அல்லம்பட்டி சுரங்கப்பாதை ரோட்டில் தேங்கியுள்ள மேன்ஹோல் 'லீக்' சரிசெய்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.