/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் மேவிய வாறுகால்; தேங்கும் கழிவுநீரால் அவதி
/
மண் மேவிய வாறுகால்; தேங்கும் கழிவுநீரால் அவதி
ADDED : ஜூலை 25, 2024 03:46 AM
ராஜபாளையம்: மேம்பாட்டு பணிக்காக தோண்டியதால் குண்டும் குழியுமாக மாறிய மண் ரோடான பரிதாபம், வாறுகால் மண்மேவியதால் சிக்கல், ஓடையில்  அள்ளப்படாத கழிவுகள் என எண்ணற்ற பிரச்சனைகளில்சிக்கி தவிக்கின்றனர் ராஜபாளையம் நகராட்சி 34வது வார்டு பகுதி மக்கள்.
தென்காசி ரோடு, சங்கரன்கோயில் ரோட்டிற்கு இடையே உள்ள இப்பகுதியில் சிங்கராஜா கோட்டை மெயின் தெரு, முகில் வண்ணம் பிள்ளை தெரு 1,2, காட்டு தெருவின் ஒரு பகுதியை உள்ளடக்கிடய இவ்வார்டில் ஏற்கனவே போடப்பட்ட மெயின் ரோடுகள் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டி தற்போது சேதமாகி மண் ரோடாக மாறி உள்ளது.
சந்து பகுதிகளில் பெரும்பாலான ரோடு பணிகள் தொடங்காமல்மழையின் போது சேறும், சகதியுமான நிலை ஏற்படுகிறது.
பிரதான ஓடையில் துார் வாராமல் மண்மேவியதால்கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மெயின் தெரு பக்கவாட்டில் வாறுகால் சுவர்களை உயர்த்தாததால் ரோட்டின் அகலம் குறைந்து வாகனங்கள் ஒதுங்கும் போது பாதிக்கின்றனர்.
ரோடு வேண்டும்
பரமேஸ்வரி, குடியிருப்பாளர்: மொத்தம் உள்ள 25 சந்துகளில் 10 மட்டும் சரி செய்துள்ளனர். மற்றவை அனைத்தும் முழுவதும் சேதமாகி பள்ளங்களாக உள்ளது. இதனால் வாகனங்களில் வரும் போது தடுமாறி விழுகிறோம். புதிய ரோடு அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
புதிய பாலம் தேவை
ராஜாராம், குடியிருப்பாளர்:சிங்கராஜா கோட்டை மெயின் தெருவிலிருந்து சங்கரன் கோயில் மெயின் ரோட்டிற்கு இணைக்கும் ஓடை கல் தரைப்பாலம் 80 ஆண்டுகளை கடந்த நிலையில் தாழ்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
வாறுகால்களை துார்வாருங்க
கனி, குடியிருப்பாளர்: வீடுகளில் வெளியேறும்  கழிவுநீர்  செல்ல முடியாதபடி வாறுகால்களில் மண்மேவி காணப்படுகிறது. முகில் வண்ணம் பிள்ளை தெருவில் இருந்து, பெரிய தெருவுக்கு கடந்து செல்ல வழியின்றி கழிவுகள் தேங்குவதால் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கொசு தொல்லை
பாலசுப்பிரமணியன், குடியிருப்பாளர்: ஆண்டத்தம்மன் கோயில் தெரு, கோதண்ட ராமர் கோயில், மகளிர் விடுதி நான்கு முக்கு ரோட்டில் கழிவுநீர்  செல்ல வழியின்றி தேக்கத்தால் கொசு தொல்லையுடன்  புழுக்கள் நெளிகிறது.மூன்று பக்கமும் கழிவு நீர் தரைப்பாலம் புதிதாக அமைக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை
புஷ்பம், கவுன்சிலர்: விடுபட்ட தெருக்களுக்கு ஒப்பந்தம் முடிவடைந்துஉள்ளது. பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் இணைப்பு பணி தாமதத்தால் ஏற்படும் சிக்கலை சரி செய்யப்படும். 80 ஆண்டு கால பாலம் புதிதாக அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுஉள்ளது.
கோதண்ட ராமர் கோயில் நான்கு மூக்கு ரோட்டில் வாறுகால் பணிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விடுபட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

