/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் முளைப்பாரி ஊர்வலம்
/
காரியாபட்டியில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : ஆக 19, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில், உலக அமைதி வேண்டி, மக்கள் நோய் நொடியின்றி வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி, கஞ்சி கலயம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
வழிபாடு மன்றத்திலிருந்து புறப்பட்டு முக்கு ரோடு மாரியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்டு வழியாக பஜார் வரை மேளதாளம் முழங்க பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் செய்தனர்.

