/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முளைப்பாரி ஊர்வலம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
முளைப்பாரி ஊர்வலம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 13, 2024 05:17 AM
மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜபாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் சில டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் பொதுவானது.
அங்கு குறிப்பிட்ட சமூகத்தினரை விழா நடத்த அனுமதிப்பதில்லை. 2023ல் கோயில் திருவிழாவின்போது பொதுப்பாதை வழியாக பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றபோது சிலர் இடையூறு ஏற்படுத்தினர்.
தற்போது கோயில் திருவிழாவையொட்டி பொதுப்பாதை வழியாக இன்று (ஜூன் 13) குறிப்பிட்ட சமூக மக்களை முளைப்பாரி ஊர்வலம் செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: சமாதான கூட்ட முடிவின்படி நிபந்தனைகளுக்குட்பட்டு சுமூகமாக ஊர்வலம் நடத்த வேண்டும்.
விதிமீறல் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோர் மீது வருவாய்த்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.