நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி முடுக்கன்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமார் 23. இவரது தங்கை முருக வள்ளி 20. பக்கத்து ஊரான சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமிக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் கட்டிலில் தூங்கியவர் தவறி கீழே விழுந்ததில் மூக்கில் அடிபட்டு இறந்ததாக கணவர் வீட்டார் தெரிவித்தனர்.
முருகவள்ளி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் சந்தன குமார் அ.முக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரிக்கின்றனர்.