/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது
/
நாரணாபுரம் பட்டாசு விபத்து: மூவர் கைது
ADDED : மே 13, 2024 12:36 AM
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் 47. இவருக்கு நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற மகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. ஆலையில் 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.
நேற்று முன்தினம் காலை 5:55 மணிக்கு பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆலை உரிமையாளர் ராஜாராம், போர்மென்கள் கருப்பசாமி, ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர்.