/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு செப்., முதல் டிச., வரை நடக்கிறது
/
தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு செப்., முதல் டிச., வரை நடக்கிறது
தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு செப்., முதல் டிச., வரை நடக்கிறது
தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு செப்., முதல் டிச., வரை நடக்கிறது
ADDED : ஆக 27, 2024 11:54 PM
விருதுநகர் : தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பை செப்., துவங்கி டிச., வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சிகள் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இறுதியாக 2019ல் நாட்டின் 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு நடந்தது. இந்தாண்டு சில மாதங்களுக்கு முன் 21வது கால்நடை கணக்கெடுப்புக்கான மென்பொருள், இனவகைகள் குறித்த செயலி' அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு செயலியின் பயன்பாடு, இனவகைகளை உள்ளீடு செய்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
கணக்கெடுப்பு அடுத்த மாதம் துவங்கப்பட்டு டிச., க்குள் முடிக்கப்படவுள்ளது. இதற்காக கணக்கெடுப்பாளர்கள்' ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் தடுப்பூசிகளின் தேவை, செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த கால்நடைகளின் உடல் நலம், ஊட்டச்சத்துக்கள், நோய்கள், அரசு நலத் திட்டங்களால் கிடைத்த பயன்கள் குறித்த சரியான தரவுகள் கிடைக்கும்.
இவற்றை அடிப்படையாக வைத்து கால்நடைகள் நலன் சார்ந்த திட்டங்களை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தகுந்தவாறு வகுத்து செயல்படுத்த முடியும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.