ADDED : மார் 02, 2025 05:55 AM
காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பாக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அலுவலர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார், டீன் ஷானாவாஸ் கண்காட்சியை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு டீன் மோகனலட்சுமி, பேராசிரியர்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.
* அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக தேசிய அறிவியல் விழா நடந்தது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தார். மாணவர் ராகவன் வரவேற்றார். துறை தலைவர் பகவதியப்பன் சிறப்புரையாற்றினார். தேசிய அறிவியல் விழாவில் மாணவர்களின் அறிவியல் கட்டுரைகள், வரைபடங்கள், மாதிரிகள், களி மண்ணால் செய்யப்பட்ட விலங்குகள், மனித உடல் உறுப்புகளின் ரங்கோலிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை காட்சி படுத்தியிருந்தனர்.
ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் வனிதா, பாஸ்கர் செய்தனர். மாணவி ரேணுகாதேவி நன்றி கூறினார்.