/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகருக்கு தடையில்லா புதிய தாமிரபரணி குடிநீர்
/
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகருக்கு தடையில்லா புதிய தாமிரபரணி குடிநீர்
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகருக்கு தடையில்லா புதிய தாமிரபரணி குடிநீர்
அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகருக்கு தடையில்லா புதிய தாமிரபரணி குடிநீர்
ADDED : ஏப் 13, 2024 02:26 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூருக்கு புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட மூலம் தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூருக்கு ஆண்டு கணக்கில் குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது. இதை சமாளிக்க தாமிரபரணி குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இது போதுமானதாக இல்லாததால் தொடர்ந்து குடிநீர் பிரச்சனை இருந்து வந்த நிலையில், இந்த 3 நகராட்சிகளுக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கு 441.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் 2020ல், நடந்து 95 சதவிகித பணிகள் முடிவடைந்தது.
ஒரு சில பகுதிகளில் மேல்நிலை தொட்டிகள் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
மார்ச் மாதத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பின்னர், 3 நகராட்சிகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
புதிய தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் படி, கூடுதலாக 1 நாளைக்கு அருப்புக்கோட்டைக்கு 60 லட்சம் லிட்டரும், விருதுநகருக்கு 22 லட்சம் லிட்டரும் சாத்தூருக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு, தினமும் அருப்புக்கோட்டைக்கு 105 லட்சம் லிட்டர், விருதுநகருக்கு 78 லட்சம் லிட்டர், சாத்தூருக்கு 23 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

